இன்று வரை உன்னை நான்
என்னை நீ காதலித்து கொண்டே
இருக்கின்றோம் இறுதிவரை
உன்னை நான் என்னை நீ
காதலித்து கொண்டே இருப்போம்
ஆனாலும் நம் பிரிவு தந்த வலி
கொடியது உன் நிழலை ஆவது
தொட்டு பார்க்கும் பாக்கியம்
இல்லாதவள் காலமெல்லாம்
உன்னோடு கற்பனையில்
வாழ்பவள் ........
வாழவோம நீயும் நானும்
கற்பனையில் உன்மீது
நான் கொண்ட எண்ணிலடங்க
எண்ணங்களில் சிலதை
வடிக்கவா வார்த்தையில்
........
என் முகம் நீ பார்க்க உன் முகம்
நான் பார்த்து கண்கள் தயங்கி
மௌனித்து நான் தலை குனிய
உன் கரங்கள் என் நாடியை
தொட்டு நிமிர்த்தி ரசித்திடனும் ...
என் விரல்கள் உன் நெஞ்சில்
கோலமிட உன் தோளில்
என் தலை சாய்த்து இவ்வுலகை
நான் மறந்து உன் கொஞ்சலில்
சில நிமிடம் வாழனும் .....
உன் வருடலுக்காக ஏங்கிடும்
என் கன்னங்கள் உன் அன்பு
முத்தத்திற்காய் ஏங்கிடும் என்
நெற்றி பொட்டு உன் ஆசை
முத்தத்திற்காய் ஏங்கிடும்
என் உதடுகள் .......
கனவுகளில் கை பிடிக்கிறேன்
காதலுடன் காத்திருக்கேன்
காலமெல்லாம் இந்த ஜென்மத்தில்
இயலாவிட்டாலும் மறு
ஜென்மத்தில் உன் மலர் மாலை
சூடி மனைவியாய் உன் காலடியில்
தவமிருக்க .........v.m.j.gowsi Miss You