Tuesday, August 7, 2012


தூக்கம் இன்றி தவிக்கும் இவள் விழிகள் பத்திரமாய் தூங்குவது எப்போது உன் மடி கொடு என் விழி தூக்கம் பத்திரமாகும் v.m..j.gowsi

மரண தண்டனை


நீ சற்று கோபமாக என்னை பார்த்தாலே உன்னிடம் பேச எண்ணிய என் வார்த்தைகள் மரண தண்டனை அனுபவித்து விடும் v.m.j.gowsi

பாவி இவள்


உன்னை விட்டு என் மனமும் விலகவில்லை என்னை விட்டு உன் காதலும் விலகவில்லை உன் மடியில் சோகம் மறக்க முடியாத பாவி இவள் v.m.j.gowsi

மரணத்தை நேசிப்பது


என்னை நீ நேசிக்காமல் இருந்திருந்தால் என்றோ மரணத்தை சந்தித்து இருப்பேன் உன்னை வெறுக்கவும் முடியவில்லை உன்னை வெறுக்காமல் எப்படி நான் மரணத்தை நேசிப்பது .......... v.m.j.gowsi

புனித தீர்த்தம்


நீ முதலில் எனக்கு முத்தமிட்டு எச்சில் நனைக்கும் இடத்தை ஊரடங்கு பிறப்பித்து பாதுகாப்பேன் புனித தீர்த்தம் பட்ட இடமாக v.m.j.gowsi

கவி படுவாள்


உனக்கான எனது தவத்தில் வரங்கள் சாபங்கள் ஆகி விட்டன புன்னகை கண்ணீர் ஆகி விட்டது ......கல்லறையிலும் கவி படுவாள் இந்த பாவி இல்லை இவள் ஆவி v.m.j.gowsi

அன்பின் தவம்


உன்னால் மட்டுமே படிக்கபட்ட அன்பின் தவம் இவளடா ....... உனக்காகவே இவள் அன்புடா v.m.j.gowsi

மண்ணால் செய்த சிற்பம் கூட கை கோக்கின்றது நிஜமான நாமோ நினைவுகளுடன் இங்கே பரிதவிக்கின்றோம் v.mm.j.gowsi

வலியை


வலியை என் அன்பால் உணர்கிறேன் உன் மீது அன்பு கொண்டு உரிமை கொள்ளும் பொழுது என் உணர்வுகளை நீ வார்த்தையால் கொல்லும் பொழுதுகளில் v.m.j.gowsi

உன் பிரிவில்


என் இதயத்திற்கு கண்கள் இல்லை அதனால் தான் உன்னை காணாமலே காதல் கொண்டேன் என் கண்களுக்கு உயிர் உண்டு அதனால் தான் உன் பிரிவில் கண்ணீர் வடிக்கின்றது v.m.j.gowsi

முதல் கவிதை


உனக்கான என் முதல் கவிதை உயிர் பெறவில்லை என் கைகளை நனைத்தது ஆம் எந்தன் கண்ணீர் உனக்கான முதல் கவிதை v.m.j.gowsi

நினைவுகள்


மரண வாசலை தொட நான் தயார் ஆனால் காத்திருக்கிறேன் உன் நினைவுகள் என் நெஞ்சை விட்டு
விலகும் நொடிக்காக v.m.j.gowsi

மனம் கேட்காமல்


மனம் கேட்காமல் மறு படி மறு படி உன்னை தேடி வருகிறேன் இறுதியில் நீ வார்த்தையால் நோகடிக்கும் பொழுது மனம் வெறுத்து இனி நீ வேண்டாம் என்றே போகிறேன் ஆனால் மீண்டும் மனம் கேட்காமல் ............v.m.j.gowsi

கெட்டி மேள


கெட்டி மேள சத்தம் கேட்டாலே மனம் குளிரும் எனக்கு எங்கே கெட்டி மேள சத்தம் கேட்டாலும் நம் காதல் அழுவதே கேட்க்கின்றது .v.m.j.gowsi

சாதல் வரம்


இரு உயிர் ஒரு பொருள் தரும் திருக்குறளாய் கருவிலே பாடம் சொல்ல வேண்டிய நீயோ சாதல் வரம் தந்து போனாயே v.m.j.gowsi

காதல்


உன்னை விட என் வீட்டு சுவருக்கும் எந்தன் அணைப்புக்கும் துணையாகும் தலையணைக்குமே தெரியும் உன் மீது நான் கொண்ட காதல் v..m.j.gowsi

இதய தெய்வம்


கோவிலுக்குள் நுழையும் பொழுதெல்லாம் என்னுள் தெரிவது உன் முகமே என்
இதய தெய்வம் நீ என்பதால இல்லை உன் நலமே இறைவனிடம் வேண்டி நிற்பதால v .m.j.gowsi

வடிக்கவா வார்த்தையில்


இன்று வரை உன்னை நான் என்னை நீ காதலித்து கொண்டே இருக்கின்றோம் இறுதிவரை உன்னை நான் என்னை நீ காதலித்து கொண்டே இருப்போம் ஆனாலும் நம் பிரிவு தந்த வலி கொடியது உன் நிழலை ஆவது தொட்டு பார்க்கும் பாக்கியம் இல்லாதவள் காலமெல்லாம் உன்னோடு கற்பனையில் வாழ்பவள் ........ வாழவோம நீயும் நானும் கற்பனையில் உன்மீது நான் கொண்ட எண்ணிலடங்க எண்ணங்களில் சிலதை வடிக்கவா வார்த்தையில்
........ என் முகம் நீ பார்க்க உன் முகம் நான் பார்த்து கண்கள் தயங்கி மௌனித்து நான் தலை குனிய உன் கரங்கள் என் நாடியை தொட்டு நிமிர்த்தி ரசித்திடனும் ... என் விரல்கள் உன் நெஞ்சில் கோலமிட உன் தோளில் என் தலை சாய்த்து இவ்வுலகை நான் மறந்து உன் கொஞ்சலில் சில நிமிடம் வாழனும் ..... உன் வருடலுக்காக ஏங்கிடும் என் கன்னங்கள் உன் அன்பு முத்தத்திற்காய் ஏங்கிடும் என் நெற்றி பொட்டு உன் ஆசை முத்தத்திற்காய் ஏங்கிடும் என் உதடுகள் ....... கனவுகளில் கை பிடிக்கிறேன் காதலுடன் காத்திருக்கேன் காலமெல்லாம் இந்த ஜென்மத்தில் இயலாவிட்டாலும் மறு ஜென்மத்தில் உன் மலர் மாலை சூடி மனைவியாய் உன் காலடியில் தவமிருக்க .........v.m.j.gowsi Miss You

உணர்வுகள்


காற்றலை வழி நீ அனுப்பிய காதல் வலிக்கின்றதடா எந்தன்உணர்வுகள்
உன்னை தீண்டாமல் போனதால் v.m.j.gowsi

புரியாத புதிராகி போனது


உன்னிடம் என்னை கொடுத்து என்னுள் உன்னை வாங்கி இதயத்தால் நாம் இணைந்த பொழுது கூட கேட்க்காத கேள்வியை உன்னை பிரிந்து நீ வேறு நான் வேறு என்று ஆகிய பின் நம் நினைவுகளுடன் நாம் மீண்டும் சந்தித்து உன் முகம் பார்த்த நொடி கேட்க்க தோன்றியது இத்தனை நாளை எங்கிருந்தயடா ? என்று பிரிவின் வலி கேட்க்கும் கேள்வி இது புரியாத புதிராகி போனது நம் நேசம் v .m.j.gowsi

நம் நேசம்


தவறான காதல் இல்லை நம் காதல் தவறிப்போன காதல் நம் காதல் ஆனாலும் தவறாமல் நம் நேசம் நம் நெஞ்சத்தில் v.m.j.gows

முகம் புதைக்கும் நாள்


சுமையான என் இரவுகள் சுகமாக விடியும் நாள் உன் மடி மேல் இவள் முகம் புதைக்கும் நாள் v.m.j.gowsi

தெய்வம்


உன்னை நான் எனது தெய்வம் என்றேன் என் தாயானவனே நீயும் அந்த தேவதை போல் இறுதிவரை தரிசனம் தராமல் போகிறாய் v.m.j.gowsi

முத்தத்திலும்


நீ என்னிடம் கேட்டு வாங்கும் முத்தத்திலும் நான் கேட்காமலே நீ தந்திடும்
காண்கிறேன் உன் காதலை v.m.j.gowsi

என் மன்னவா


காதலுக்கு என்னுள் முன்னுரை எழுதியவனே காலமெல்லாம் உன் பாசம் என்னும் கவி மட்டும் எழுதி விட்டு போ நீ எனக்காக இல்லாவிடாலும் உன்னை எண்ணி என் காதலை கவியாய் வடிதேனும் நான் வாழ்வேன்
v.m.j.gowsi

நினைவுகளை


என்னுள் நிஜமாய் வந்து என் முன் கானலாய் வந்து போறவனே உந்தன் நிஜங்கள் தழுவாத பொழுதும் உந்தன்
தழுவி வாழ்கிறேன் நானடா v.m.j.gowsi

உனக்குள் பிடித்து போனதால்


உந்தன் குங்குமம் வாங்கி வாழவேண்டியவள் இன்று எந்தன் குங்குமம் நீ பார்க்க நான் வாழ்கிறேன் உன்னுள் எல்லாம் எனக்குள் பிடித்து போனதால் என்னுள் எல்லாம்
v.m.j.gowsi

மரணித்த நாட்கள்


உன் குரல் கேட்க்காமல் விடிந்த இரவுகள் உன் பாசம் காணாத நாட்கள் என் வாழ்வில் சந்தோசங்கள்
v.m.j.gowsi

எல்லாம் கனவே


முத்தம் தந்து கொஞ்சம் சிரித்தாய் மெய் சிலிர்த்து மனம் குளிர்ந்தேன் ....தூக்கம் கலையும் பொழுதே புரிந்து கொண்டேன்
என்று v.m.j.gowsi

நானும் என் கவிதைகளும்


என்னோடு என் கவிதைகளும் உன் மடி சேர மறுஜென்மம் எடுத்தும் காத்திருப்போம் காதலனே வரம் கொடு கை ஏந்தி உன் காலடியில்
v.m.j.gowsi

நிறைவேறாத ஆசை


உன்னை எண்ணி கவி வடிக்கவே இவளால் முடியும் நீயே என் வாழ்க்கை என்று உன் கரம் பிடிக்க இவளால் இயலாது எந்தன் நிறைவேறாத ஆசைகளில் நிறைவேற்ற முடியாதா
உந்தன் உறவடா v.m.j.gowsi

சுவாசமானாய்


என் சுவாசம் நீ ஆனால் கையில் பிடிபடாத காற்றை போலவே நீயும் என்னுள் சுவாசமானாய் v.m.j.gowsi

சுயம்வரம்


முடிவெடுத்து மணம் முடிக்க தெரியாமல் நம் கனவுகளில் இனிதே நடக்கின்றது நம் சுயம்வரம் V
.M.J.GOWSI

உன் நேசத்திற்காய்


உறவுகளுக்காய் உன்னை நான் பிரிந்தாலும் உன்னால் பூட்டபட்ட என் இதய கதவை இன்னொருவரால் நிச்சயம் திறக்க முடியாது உன் பாசத்தை உயிராய் எண்ணி வாழ்கிறேன் உன் நேசத்திற்காய் v.m.j.gowsi